கவினின் ‘ஸ்டார்’ பட ப்ரோமோ: ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் கவின்
நடிகர் கவின்

டிகர் கவின் நடித்து அடுத்து வெளிவர உள்ள திரைப்படமான, ‘ஸ்டார்’ படப் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் கவினுக்கு, ‘கனா காணும் காலங்கள்’ முதல் ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கமாக உள்ளது. அதைத் தொடர்ந்து, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இதையடுத்து, கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட், டாடா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, கவின் நடிப்பில் கடைசியாக வெளியான, ‘டாடா’ படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றன. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவருக்கு அவரது காதலியுடன் திருமணம் நடைபெற்றது. இந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், கவினின் அடுத்த படம் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளியானது. ‘ஸ்டார்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த படத்தை, 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கிய இளன் இயக்குகிறார். இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

'நித்தம் ஒரு வானம்' எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், 'விருபாக்ஷா' படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ.ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். தேசிய விருது வென்ற ஆடை வடிவமைப்பாளரான சுஜித் சுதாகரன் ஆடை வடிவமைப்பாளராகவும், எஸ்.வினோத்குமார் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது. 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகவும், விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் படக் குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், யுவன் சங்கர்ராஜாவின் பிறந்த நாளான இன்று, இப்படத்தில் இருந்து பிரத்யேக ப்ரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com