நம்பி நாராயணனுக்கும் வாழ்த்து கூறிய நடிகர் மாதவன்!

நம்பி நாராயணன் - மாதவன்
நம்பி நாராயணன் - மாதவன்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அன்று முதல் இஸ்ரோ விஞ்ஞானிகள் தூக்கமின்றி சந்திரயானை கண்காணித்து வருகின்றனர். இவர்களின் முயற்சி வீண் போகவில்லை. வெற்றிக்கரமாக இன்று மாலை திட்டமிட்டபடி சந்திரயான் நிலவில் கால் பதித்தது.

முன்னதாக நடிகர் மாதவன் நம்பி நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், என் வார்த்தையைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.சந்திரயான் 3 நிச்சயம் வெற்றிபெறும். இஸ்ரோவிற்கு வாழ்த்துகள். எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. நம்பி நாராயணனுக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரோவில் கடந்த 1966 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த நம்பி நாராயணன், வாயுக்களை திரவமாக்கி அதனை எரிபொருளாக பயன்படுத்தும் கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தில் பணியாற்றினார். கடந்த 1970 களின் துவக்கத்தில் விகாஸ் என்ஜின் எனப்படும் திரவ உந்து மோட்டாரை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு ரகசியங்களை வெளிநாட்டு அதிகாரிகளுக்கு வழங்கிய புகாரில் நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்கு சிறையில் இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் சட்டப்போராட்டம் நடத்தினார். அதன் விளைவாக உச்ச நீதிமன்றம் நம்பி நாராயணன் நிரபராதி என தீர்ப்பளித்தது. இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நடிகர் மாதவன் ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கினார்.

logo
Kalki Online
kalkionline.com