மம்முகாவின் அடுத்த தரிசனம் 'பிரமயுகம்' புதிய அப்டேட்!

மம்முகாவின் அடுத்த தரிசனம் 'பிரமயுகம்' புதிய அப்டேட்!

தென்னிந்திய சினிமாவில் மம்முட்டிக்கு என்று தனி இடம் உள்ளது. இவரின் திரில்லர் படங்களை ரசிக்க  மொழிகளை தாண்டிய ரசிகர்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான திரில்லர் ஆக்ஷன் படமான  கண்ணுர் ஸ்குவாட் தென்னிந்திய ரசிகர்களால் விரும்பி ரசிக்கப்படுகிறது.         

தற்போது பிரமயுகம் என்ற படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். திரில்லர் - ஹாரர் பின்புலத்தில் உருவாகி வரும் இப்படத்தை ராகுல் சாதாசிவன்இயக்குகிறார். நைட் ஷிப்ட் மற்றும் Y நாட் ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தை தயராரிக்கிறார்கள். பிரமயுகம் திரைப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மலையாளம் உடப்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வர உள்ளது. இப்படித்தின் போஸ்டர் ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெளியாகி  ரசிகர்கள் பலரை வியப்படைய செய்தது.

இப்போது படம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது.2024 ஆம் ஆண்டு மாறுபட்ட மம்முக்காவை ரசிகர்கள் திரையில் பார்க்கலாம். இந்த வருடம் கண்ணுர் ஸ்குவாட் என்றால் அடுத்த வருடம் பிரமயுகம் என்கிறார்கள் சேட்டன்கள். மம்முட்டியின் சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com