2 நாட்கள் வீட்டில் சடலமாக கிடந்த பிரபல நடிகர்... திரையுலகினர் அதிர்ச்சி!

Actor Pradeep Vijayan
Actor Pradeep Vijayan

தெகிடி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்த நடிகர் பிரதீப் விஜயன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தெகிடி, வட்டம், டெடி, லிஃப்ட், மேயாத மான் உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன். வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சென்னை பாலவாக்கத்தில் ஒரு வீட்டில் பிரதீப் விஜயன் வசித்து வந்தார். அவருக்கு திருமணமாகவில்லை. எனவே அவர் வீட்டில் தனியாகவே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய செல்போனுக்கு அவருடைய நண்பர்கள் இரு நாட்களாக போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த நண்பர் ஒருவர், பிரதீப் விஜயனின் வீட்டுக்கு போய் பார்த்த போது அவரது வீட்டுக் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

Actor Pradeep Vijayan
Actor Pradeep Vijayan

இதனால் சந்தேகமடைந்த அந்த நண்பர், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸாரும் தீயணைப்பு துறையினரும் வந்தனர். கதவை உடைத்து உள்ளே போய் பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. கழிவறையில் இறந்த நிலையில் கிடந்தார் பிரதீப் விஜயன். அவரது தலையிலும் அடிபட்டு கிடந்தது. ஏற்கெனவே அவருக்கு தலைச்சுற்றல், மயக்கம் இருந்து வந்த நிலையில் அவர் கழிவறை சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரின் திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com