சர்ச்சையான பிரகாஷ் ராஜ் ட்வீட்.. "புரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்சனை"

PRAKASH RAJ
PRAKASH RAJ
Published on

நடிகர் பிரகாஷ்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரயான் - 3 ஐ விமர்சிக்கும் விதமாக கேலிச் சித்திரம் ஒன்றை ட்விட் செய்திருப்பது பேசும் பொருளாகியுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்கு கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கிட்டத்தட்ட கிளைமாக்ஸை நெருங்கி வருகிறது. நேற்று இறுதி சுற்றுவட்டப் பாதையில் உயரம் வெற்றிக்கரமாக குறைக்கப்பட்டு சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 153 கிலோ மீட்டராகவும், அதிகபட்ச தூரம் 163 கிலோ மீட்டர் என்ற அளவில் விண்கலம் பயணித்துகொண்டுள்ளது.

இந்த நிலையில், நிலவின் புவிவட்ட சுற்றுப்பாதையில் உலாவி வரும் சந்திரயான் விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்து சென்றது. இதனைத்தொடர்ந்து நாளைய தினம் (வரும் 23-ம் தேதி) லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து அதிலிருந்து பிரக்யான் ரோவர் நிலவில் ஆய்வுப் பணியை மேற்கொள்ள உள்ளது.சந்திராயன் 3 வெற்றியை உலகமே எதிர்நோக்கிக் காத்து கொண்டிருக்கும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நிலாவில் ஒருவர் டீ போடுவதாக கேலிச்சித்திரம் ஒன்றை ட்விட் செய்தார். அதன் கேப்ஷனாக அவர் ‘முக்கியச் செய்தி: வாவ்... விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் இருந்து வரும் முதல் படம்’ என பதிவிட்டுள்ளார். இதுதான் நெட்டிசன்களிடையே கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

அவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, பிரகாஷ்ராஜ் மற்றொரு பதிவை போட்டிருக்கிறார். அதில் அவர் "வெறுப்பு வெறுப்பை மட்டுமே பார்க்கிறது. நான் என் பதிவின் மூலம் ஆம்ஸ்ட்ராங் காலத்தின் நகைச்சுவையை குறிப்பிடுகிறேன். அதன்படி என் பதிவில் நான் நமது கேரளா சாய்வாலாவை (தேநீர் கடைக்காரர்களை) கொண்டாடுகிறேன். உங்களுக்கு ஜோக் புரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்சினை” என குறிப்பிட்டுள்ளார்.

'உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும், அங்கு ஒரு மலையாளி டீக்கடை வைத்திருப்பார்' என்னும் காமெடியை நினைவுபடுத்தும் விதமாகத்தான் விக்ரம் லேண்டர் அனுப்பும் புகைப்படத்தில் மலையாளி டீக்கடைக்கார் இருப்பதாக வெளியிட்டிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com