நடிகர் பிரித்விராஜின் 'ஆடு ஜீவிதம்'! பிளாக் பஸ்டர் படங்களின் பட்டியலில் இடம் பெறுமா?

The Goat Life
The Goat Life
Published on

மலையாள சினிமாவின் இன்றைய முன்னனி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர்  தான் நடிகர் பிரித்வி ராஜ். இவருடைய இந்த வெற்றிகரமான சினிமாப் பயணம் குறித்தும் ஆடு ஜீவிதம் திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையுமா என்பது குறித்தும் பின்வரும் வரிகளில்...

பன்முக கலைஞர்:

பிரித்விராஜ் அக்டோபர் 16, 1982 ஆம் ஆண்டு திருவனந்தபுரம், கேரளாவில் பிறந்தார். இவரின் தந்தை சுகுமாரன் மற்றும் தாயார் மல்லிகா சுகுமாரன். இவர்கள் இருவருமே திரைப்படங்களில் நடிகர் மற்றும் நடிகையாக பணியாற்றியுள்ளனர். பிரித்விராஜ் இந்திய சினிமாத்துறையில் ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் , தயாரிப்பாளராகவும், பின்னனிப் பாடகராகவும் தனது பன்முகத் திறமையையும் வெளிக்காட்டி வருகிறார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரை ‘PANINDIA STAR’ என்றால் கூட அது மிகையாகாது.

Prithviraj Sukumaran
Prithviraj Sukumaran

சினிமாப் பயணம்:

பிரித்விராஜ் 2002 ஆம் ஆண்டு  ‘நந்தனம்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் தனது முதல் அடியை எடுத்து வைத்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி, காவியத் தலைவன் உள்ளிட்ட 80ற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து தனக்கென்ற ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

பிளாக் பஸ்டர் திரைப்படங்கள்:

இவர் நடித்த திரைபடங்களிலேயே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைபடங்கள் என்ற வரிசையில் முதல் பத்து திரைப்படங்களாக இவற்றைக் குறிப்பிடலாம்.

1.    ஜன கன மன (2022)

2.    மும்பை போலிஸ் (2013)

3.    மொழி (2007)

4.    ப்ரோ டேடி (2022)

5.    ட்ரைவிங் லைசென்ஸ் (2019)

6.    லூசிபர் (2019)

7.    அய்யப்பனும் கோஷியும் (2020)

8.    நம்மால் தம்மில்(2009)

9.    மெமரீஸ் (2013)

10. என்னு நிண்டே மொய்தீன் (2015)

தயாரிப்பாளர்/ இயக்குநர் அவதாரம்:

திரைத்துறையில் ஒரு சிறந்த நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் பயணித்து வருகிறார் ப்ரித்வி. இவர் ‘ஆகஸ்ட் சினிமா’ என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த திரைப்பட நிறுவனத்தின் மூலம் உருமி, இந்திய ரூபாய், காதல் கடன்னு ஒரு மாத்துக்குட்டி, டபுள் பேரல் போன்ற பல சிறப்பான திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் இவர் தயாரித்த திரைப்படங்களுக்காக பல விருதுகளையும் கூட வென்றுள்ளார்.

நடிகர் பிரித்விராஜ் ஒரு திரைப்பட இயக்குநராக ‘லூசிபர்’ என்ற தன்னுடைய முதலாவது படத்தை 2019ஆம் ஆண்டு நடிகர் மோகன் லால் முதன்மை கதாப்பாத்திரமாக வைத்து இயக்கினார். இப்படமானது மலையாள சினிமாவின் ஒருசில மிகச்சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதற்கு பிறகு இரண்டாவதாக ‘ப்ரோ டேடி’  என்ற காமெடி நிறைந்த திரைப்படத்தை  இயக்கியுள்ளார். இப்படத்திலும்  நடிகர் மோகன் லால் நடித்துள்ளார். மேலும் இவரோடு   இணைந்து நடிகர் பிரித்விராஜும் நடித்துள்ளார்.

The Goat Life
The Goat Life

ஆடு ஜீவிதம்:

நடிகர் பிரித்விராஜ் தற்போது  நடித்துள்ள ‘ஆடு ஜீவிதம்’ திரைபடம் வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் அமலா பால் , வினீத் ஸ்ரீவின்வாசன் மற்றும் ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிகளவிலான ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற இந்தப் படம் தற்போது  தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த   எதிர்பார்ப்புகளை அதிகரித்தது. குறிப்பாக அண்மையில் வெளியாகும் பெரும்பாலான மலையாளப் படங்கள் ஏராளமான  தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதன் காரணமாக நடிகர் பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் திரைபடத்தின் மேல் அதிக கவனம் குவிந்துள்ளது.  இவருடைய பயணத்தில் இதுவும் ஒரு மிகச்சிறந்த பிளாக் பஸ்டர் திரைப்படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்போம்! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com