
நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா படங்களின்மூலம் தன்னை சிறப்பான இயக்குநராக நடிகராக, தயாரிப்பாளராக வெளிப்படுத்தியவர். காமெடி ஹாரர் ஜானரில் வெளியான இநத்ப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெயின்மெண்டை கொடுத்தது. கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் வசூலை குவித்தது. இதனிடையே மற்ற இயக்குநர்களின் டைரக்ஷனில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் ராகவா லாரன்ஸ்.
சமீபத்தில் இவரது நடிப்பில் அடுத்தடுத்த சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா XX படங்கள் வெளியாகின. இதில் சந்திரமுகி 2 கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஜிகர்தண்டா வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 2 படங்களுமே ஏற்கனவே வெளியான படத்தின் 2ஆம் பாகம் தான்.
சந்திரமுகி 2-ல் பூர்த்தி செய்யவில்லை என வேதனைக்குள்ளான ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா பிரசாதமாக அமைந்தது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் தனது அட்டகாசமான நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருப்பார். இதுவரை யாரும் பார்த்திடாத வேடத்திலும், தொனியிலும் தோன்றியிருப்பார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய அடுத்தப்பட வேலைகளில் தற்போது ராகவா லாரன்ஸ் துவங்கியுள்ளார். அடுத்ததாக அவர் தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் புதிய படத்திற்கான டிஸ்கஷனை துவங்கியுள்ளார். விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவரே இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே படத்தில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என மூன்றுமே அவரே என தெரிகிறது.