இரு வேட்டையர்கள் நேருக்கு நேர்... ரஜினிக்கு வில்லனாகும் ராகவா லார்ன்ஸ்!

chandramukhi vettaiyan
chandramukhi vettaiyan

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அவரின் 171வது படத்தின் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கப்போவதாகத் தகவல் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ஜெய்லர் திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து மக்களின் வரவேற்பை பெற்றது. அதேசமயம் இயக்குநர் லோகி லியோ படத்தில் பிஸியாக இருந்தார். ஆனால் அந்த பிஸிக்கு நடுவே அடுத்து தலைவர் ரஜினியுடன் கைகோர்ப்பதாக அறிவித்தார். லியோ படத்தை முழுவதுமாக முடித்தப்பின்னர் தலைவர்171க்கான அப்டேட்டுகள் வெளியிடுவதாகவும் லோகி கூறினார்.

இதனையடுத்து லியோ படத்தின் வெற்றிவிழா நவம்பர் 1ம் தேதி நடந்து முடிந்தது. அந்த வகையில் இன்று லோகேஷ் ரஜினிகாந்த் இணையும் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரமுகி பாகம் 1 படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்தது இன்னும் தமிழ் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. அந்த படத்தில் சரவணன் கதாப்பாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாருமே நடிக்க முடியாது என்ற அளவிற்கு அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்தார். அந்நிலையில் சந்திரமுகி பாகம் 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருந்தார். அவருக்கு சரவணன் சாயலில் தான் ரோல் அமைந்தது என்றாலும் அந்த அளவிற்கு ரசிகர்களின் வர்வேற்பை பெறவில்லை என்றே கூற வேண்டும். இப்படமும் சந்திரமுகி 1 படத்தை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் ஓரளவுக்கு வசூல் செய்தது.

சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினிகாந்த் தன்னை வேட்டையனாக காட்டிக்கொள்வார். அதேபோல் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் உடம்பில் வேட்டையனின் ஆவி பூந்துவிடும். இப்போது இரண்டு வேட்டையர்களும் ஒரே படத்தில் நேருக்கு நேர் இருந்தால் நிச்சயம் அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் என்றே கூறலாம்.

மேலும் தலைவர் 171 படம் LCU கீழ் வராது என்று லோகேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதுவுமில்லாமல் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான இவர் ரஜினியை மீண்டும் ஒரு படத்தில் வில்லனாகப் பார்க்க வேண்டும் என்று அவரே கூறினார். அதற்கு ரசிகர்கள், தலைவர் 171 படத்தை LCU கீழ் எடுத்தால் கமலுக்கு ஏற்ற தரமான வில்லனாக மீண்டும் நீங்களே கொண்டுவரலாமே என்று சமூக வலைத்தளங்களில் தங்கள் பதிவுகளைக் கூறி வருகிறார்கள்.

ராகவா லாரன்ஸ் தான் தலைவரின் 171 படத்திற்கான வில்லன் என்ற தகவலைக் கேட்டு லோகேஷ் உருவாக்கும் ராகவா லாரன்ஸின் அந்த வில்லன் ரோல் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com