மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள விடுதலை திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறனையும், கதாநாயகன் சூரியையும் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் தரமான படைப்புகள் வெளியானால், அதனை கண்டு ரசித்து படக்குழுவினரை நேரில் வரவழைத்தோ, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோ வாழ்த்து தெரிவித்து பாராட்டுவது அவரது வழக்கம்.
வெற்றிமாறன் இயக்கத்தில், கதாநாயகனாக நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சூரியுடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த கதை முழுமையாக சினிமா ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்று வெற்றிமாறன் விரும்பியதால் 2 பாகங்களாக இப்படத்தை வெளியிடுகிறார் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ’விடுதலை’.ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டுஉருவாக்கப்பட்டுள்ளது.
“வெற்றிமாறன் படத்தில் சூரி கதாநாயகனா என்று யோசித்தவர்கள், படத்தைப் பார்த்த பிறகு குமரேசன் என்ற போலீஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் சூரி எந்த அளவுக்குப் பொருத்தமாக நடித்துள்ளார் என்பதை ஆச்சர்யத்துடன்
கடந்த மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் விடுதலை திரைப்படம் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் நேர்மறையான விமர்சனங்களையே தந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், வசூலையும் குவித்து வரும் விடுதலை திரைப்படத்தை பார்த்து ரசித்த ரஜினிகாந்த், இயக்குநர் வெற்றிமாறனையும் நடிகர் சூரியையும், நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.