புத்த மதத்துக்கு மாறிய வில்லன் நடிகர்!

சாய் தீனா
சாய் தீனா

தமிழ் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, 'விருமாண்டி' படத்தில் மூர்க்கமான ஜெயில் வார்டன் கதாபாத்திரத்தில் நடித்து, தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் வில்லன் நடிகர் சாய் தீனா.

 விருமாண்டி படத்தைத்  தொடர்ந்து புதுப்பேட்டை, தலைநகரம், எந்திரன், உட்பட 30-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். நடிகர் சாய் தீனா, ஆரவாரமில்லாமல் பல சமூக நற்பண்களையும் செய்து வருகிறார்.

 இந்நிலையில் நடிகர் சாய் தீனா தற்போது இந்து மதத்திலிருந்து குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியதாக தெரிவித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் புத்த மத துறவி ஒருவருடன் சாய் தீனாவும் அவரது மனைவி, மூன்று குழந்தைகளும் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. திடீர் என இவர் புத்த மதத்திற்கு மாற என்ன காரணம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com