நாளை ரிலீஸாகும் லால்சலாம்.. ரஜினிக்கு டப்பிங் பேசியது யார் தெரியுமா?

ரஜினி
ரஜினி

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்திற்கு மற்ற மொழிகளில் டப்பிங் பேசும் நடிகர் குறித்து பெரும்பாலும் யாருக்கு தெரியாது.

தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தான் லால் சலாம். மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் அசத்தலாக நடித்திருக்கும் இந்த படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

ஆடியோ லாஞ்சிற்கு பிறகு பல சர்ச்சைகளை சந்தித்த லால் சலாம் படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நாளை வெளியாகும் இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா, தங்கதுரை ஆதித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரஜினிகாந்திற்கு டப்பிங் பேசிய நடிகர் குறித்தவிவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தை போன்றே நாளை ஆந்திரா, தெலுங்கானாவிலும் லால் சலாம் ரிலீஸாகிறது. வழக்கமாக ரஜினி படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம்; செய்யப்படும் போது பாடகர் மனோ ரஜினிக்காக டப்பிங் பேசுவார். ரஜினியே தெலுங்கில் பேசுவது போல் அட்டகாசமாக மனோ பேசுவது இருக்கும். ஆனால், லால் சலாம் படத்துக்கு மனோ டப்பிங் பேசவில்லை. அவருக்குப் பதில் நடிகர் சாய் குமார் ரஜினிக்கு டப்பிங் பேசியுள்ளார். சாய் குமார் இதற்கு முன் பெத்தராயுடு, பாட்ஷா படங்களுக்கு ரஜினிக்காக டப்பிங் பேசியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com