டிடெக்ட்டிவாக நடிக்கும் சந்தானம்!

சந்தானம்
சந்தானம்

லாபிரிந்த் பிலிம்ஸ் ப்ரோடக்ஷன்(Labyrinth film productions) தயாரிப்பில் இயக்குனர் மனோஜ் பீதா இயக்கியுள்ளப் படம் 'ஏஜென்ட் கண்ணாயிரம்'. தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அஜய் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

சந்தானம் இப்படத்தில் கண்ணாயிரம் என்ற கதாபாத்திரத்தில் துப்பறிவாளனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரியா சுமன் நடித்துள்ளார்.

முனிஷ்காந்த், ஸ்ருதி ஹரிஹரன், ரெடின் கிங்ஸ்லி, விஜய் டிவி புகழ், இ.ராம்தாஸ், குரு சோமசுந்தரம், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி, ஆதிரா, வனேசா குரூஸ் ஆகியோர் 'ஏஜென்ட் கண்ணாயிரத்தில்' நடித்துள்ளனர்.

ஏஜென்ட் கண்ணாயிரம்
ஏஜென்ட் கண்ணாயிரம்

2019யில் தெலுங்கில் வெளியான 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா'வின் தமிழ் ரீமேக் படம். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் எடுக்கப்பட்டது. சந்தானத்தின் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' திரைப்படம் நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com