போலியான வருத்தம்.. ஞானவேல்ராஜாவை வறுத்தெடுத்த சசிக்குமார்!

சசிக்குமார் ஞானவேல்ராஜா
சசிக்குமார் ஞானவேல்ராஜா

அமீர் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தற்போது பருத்திவீரன் படத்தை பற்றிய சர்ச்சைகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

அப்படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும், இயக்குனர் அமீருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. இந்த மோதல் நீதிமன்றத்தில் வழக்கு போடும் வரை சென்றது. தற்போதும் இந்த வழக்கு நடைபெற்று தான் வருகின்றது. இது ஒருபக்கம் இருக்க தற்போது இந்த பிரச்சனை மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சசிக்குமார், அதில், போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் எவை என்று கேள்வி எழுப்பியுள்ளார். “நான் பயன்படுத்திய வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்” என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம் என்றும் இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன என்றும் பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு என்றும் அவர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com