அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ்!

அமைதிபடை படத்தை ரீ ரிலீஸ் செய்யவேண்டும்
அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ்!
Published on

அங்காரகன் என்ற படத்தில் மாறுபட்ட காதபாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்யராஜ். மோகன் டச்சு இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய சத்யராஜ் " மணிவண்ணன் அண்ணனுக்கு பிறகு எனக்கான ஒரு டைரக்டர் அமையவில்லை. இப்ப இருக்கிற டைரக்டர் நிறைய கேரக்டர் தந்தாலும் மணிவண்ணன் போல் இல்லை. மணி அண்ணன் எனக்காக கேரக்டரை உருவாக்குவார். அங்காரகன் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கிறேன்.

நான் செல்லும் இடங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்வியை கேட்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை அந்தந்த கால கட்டத்தில் வசூலில் நம்பர் ஒன் ஆக இருப்பவரை சொல்வார்கள். முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை ஏழி சை மன்னன் என்பார்கள். அடுத்து MGR அவர்களை மக்கள் திலகம் என்றார்கள். இப்போது ரஜினியை சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். தியாகராஜ பாகவதரை சூப்பர் ஸ்டார் பாகவதர் என்றும், எம். ஜி. ஆர் அவர்களை சூப்பர் ஸ்டார் எம். ஜி. ஆர் என்று ஏன் அழைக்கவில்லை என்று கேட்க முடியுமா? சிவாஜிக்கு பிறகு நடிப்பில் கமல் தான் என்கிறோம்.

ஆனால் கமலை நடிகர் திலகம் கமல் என்று அழைப்பதில்லையே. பட்டம் என்பது அந்தந்த காலகாட்டித்தில் மக்களால் தரப்படுவன. கடந்த 45 ஆண்டுகளாக ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார். தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிதான். விஜய், அஜித் போன்றவர்களுக்கு தளபதி, தல பட்டங்கள் தான் பொருத்தமானது என்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பரபரப்பு கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் வசந்த மாளிகை படத்தை ரீ ரிலீஸ் செய்தது போல் தான் நடித்த அமைதிப் படை படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com