அப்போலாம் நடிகர் செந்திலை ரொம்ப கேவலப்படுத்துவாங்க – பாக்யராஜ்!

Bhagyaraj with Senthil
Bhagyaraj with Senthil
Published on

நடிகர் செந்திலுக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்தது பாக்யராஜ் என்று பலருக்கும் தெரியும். அந்தவகையில் செந்தில் குறித்து பாக்யராஜ் பேசியதைப் பார்ப்போம்.

நடிகர் செந்தில் தனது 12ம் வயதில் சொந்த ஊரான ராமநாதபுரத்தில் இருந்து வெளியூருக்கு ஓடி வந்துவிட்டார். எண்ணெய் ஆட்டும் பணியிலும், மதுபானக் கடையிலும் வேலை செய்து வந்த இவர், பின் நாடகத்தில் சேர்ந்து நடித்து தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார். இதன்பின்னரே அவர் சினிமா துறையில் தடம் பதித்தார். முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்த இவருக்கு, மலையூர் மம்பட்டியன் படம் ஒரு மாபெரும் திருப்பத்தைத் தந்தது.

சரியாக 1979ம் ஆண்டு ஒரு கோவில் ஒரு தீபங்கள் என்ற படத்தின்மூலம் அறிமுகமான இவர், பின்னர் ஒரு வருடத்தில் ஏராளமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த இவருக்கு, ஒரு பாட்னர் கிடைத்ததுபோல் கவுண்டமணி கிடைத்தார். பின்னர் எங்கு திரும்பினாலும், கவுண்டமனி செந்தில் காமெடி என்றுதான் பலரும் ரசித்தனர். இவர்கள் கூட்டணி பலருக்கும் பிடித்துப்போனது.

இப்படி நடிகர் செந்தில் வெற்றிப் பாதையில் பயணித்தாலும், இவர் கடந்து வந்த பாதையும் முட்களே. இதுகுறித்து இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் பேசியதைப் பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
பிக்பாஸ் செட் அமைக்கும் பணியின்போது தவறி விழுந்த பணியாளர்!
Bhagyaraj with Senthil

“ நான் சினிமாவுக்கு வராத அப்போ, நாடக நடிகர்கள் செந்தில ரொம்ப கேவலப்படுத்துவாங்க. டேய் சொட்ட இங்க வாடா என்று கூப்பிட்டு.. போய், டீ வாங்கிட்டு வாடான்னு சொல்லுவாங்க. பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கும். எனக்கு ஒரு வாய்ப்பு வரும்போது இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். அப்றம்தான் மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, தூறல் நின்னு போச்சு படங்கள்ல நடிக்க வெச்சேன். படத்துல நடிச்சது செந்திலுக்கு ரொம்ப சந்தோஷம்.” என்று பேசினார்.

இதுபோல ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது உதவி செய்யவே ஒருவர் வருவார். அவரே கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு கடவுளாகத் தெரிவார்.  அப்படி உங்கள் வாழ்வில் வந்தவர் யார்?

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com