மீண்டும் வெள்ளி திரையில் 12B ஷாம்!

Actor Shaam
Actor Shaam

மிழ் சினிமாவில் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக நடித்து  வருபவர் ஷாம். குறிப்பாக கடந்த சில வருடங்களாக சிறந்த  கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் நல்ல வரவேற்பை  பெற்று  வருகிறார். 

இந்த வருட துவக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக  நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார் ஷாம். இந்த நிலையில் தற்போது  பிரபல  தெலுங்கு இயக்குநர் சீனு வைட்லா இயக்கி வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரை தான் ஏற்று நடித்திராத ரா ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷாம். இப்படம் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

கடந்த ஒரு மாதமாக  இத்தாலி நாட்டில் உள்ள மிலன், மடேரா மற்றும் ரோம் உள்ளிட்ட நகரங்களில் இதன் படப்பிடிப்பு வந்தது. இதில் ஷாம் பங்குபெற்ற  அதிரடியான மூன்று ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து படக்குழுவினர் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.

இப்படத்தில்  காவியா தாப்பர் முக்கிய  கதாபாத்திரத்தில்  நடிக்கிறார்.தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த 'தூக்குடு' உள்ளிட்ட பல வெற்றி படங்களை  சீனு வைட்லா இயக்கியுள்ளார். மிக குறைவான எண்ணிக்கை கொண்ட படங்களில் ஷாம் நடித்தாலும் 6 மெழுகு வர்த்திகள் போல சிறந்த படங்களை தருவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது.

 6 மெழுகு வர்த்திகள் படம்
6 மெழுகு வர்த்திகள் படம்

சீனு வைட்லா இயக்கத்தில் உருவாகும் இந்த படமும் இந்த நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு தரப்பு ரசிகர்களையும் கவரும்படியான படத்தின் பெயரை ஒரிரு நாட்களில் வெளியிட உள்ளது படக்குழு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com