Shah Rukh Khan
Shah Rukh Khan

நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அட்மிட்... ரசிகர்கள் அதிர்ச்சி!

Published on

நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் துவக்கம் முதலே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சிறப்பாக விளையாடி பைனலுக்கு நுழைந்துள்ளது.

இந்த போட்டியை பார்த்து தனது அணி வீரர்களை உற்சாகப் படுத்துவதற்காக, ஷாருக்கான் மற்றும் அவரது குழந்தைகள் - அப்ராம், சுஹானா, அனன்யா மற்றும் ஷனாயா ஆகியோர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இருந்தனர். அப்போது ஷாருக்கானுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் ஷாருக்கான் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் ஷாருக்கான் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையின் அறிக்கையை பி.டி.ஐ செய்தி நிறுவனம் பகிர்ந்து கொண்டது. எஸ்.ஆர்.கே நகரில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி கே.டி மருத்துவமனையில் நடிகர் ஷாருக்கான் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தியைப் பகிர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Shah Rukh Khan

நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரின் தீவிர ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com