சிம்பு...கெட்டவன்னு பெயர் எடுத்த நல்லவன்!

STR Birthday
STR Birthday

மிழ் சினிமாவில் எப்போதும் பரபரப்பாகவும் சென்சிட்டிவாகவும் பேசப்படுபவர் சிம்பு. சிலம்பரசன்,சிம்பு, தற்போது STR என்று பல பெயர்கள் இவருக்கு இருந்தாலும், சிம்பு என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் இன்று (பிப்ரவரி 3) தன்னுடைய 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அப்பா T. ராஜேந்தர்  தமிழ் சினிமாவின் மிகப்பெரியஆளுமையாக இருப்பதால், தந்தை படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே தனது நடனத்தாலும், பாடல்களாலும் ரசிகர்களை ஈர்த்தார. 2002 ஆம் ஆண்டு, T. ராஜேந்திர் இயக்கிய காதல் அழிவதில்லை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிம்பு.கோவில், அலை, தொட்டி ஜெயா போன்ற படங்கள் வெற்றி படமாக அமைந்த.                                                     

2010ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் விண்ணை தாண்டி வருவாயா சிம்புவை முக்கிய ஹீரோவாக மாற்றியது. ஆனால் இந்த வெற்றியை சிம்பு சரியாக பயன் படுத்திக்கொள்ளவில்லை என்றே சொல்லலாம். 2011ம் ஆண்டிற்கு பிறகு சிம்புவை பற்றி அதிக நெகடிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்தன.

ஒரு பிரபல நடிகையுடன்  சிம்புவுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டு திருமணம் நின்று போனது.வேறொரு ஹீரோயினுடன் சிம்பு நெருக்கமாக இருந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.இதனால் பல ஹீரோயின்கள் சிம்புவுடன் ஜோடியாக நடிக்க தயங்கினர். 2012-13 ஆம் ஆண்டிற்கு பிறகு சிம்பு சில படங்களில் நடித்தாலும் எதுவும் பெரிய வெற்றி படமாக அமையவில்லை. சிம்பு படபிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. வந்தாலும் ஒத்துழைப்பு தருவதில்லை என்ற செய்திகள் வலம் வந்தன.

இதையும் படியுங்கள்:
2023ல் இந்தியாவில் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம் எது தெரியுமா?
STR Birthday

சிம்புவால் தான் மிகவும் நஷ்டமடைந்ததாக சில தயாரிப்பாளர்கள் புகார் செய்தனர். பல தயாரிப்பாளர்கள் சிம்புவை வைத்து படம் எடுக்க தயங்கினர். என்ன ஆனார் சிம்பு? என்று பத்திரிகைகள் எழுதும் அளவிற்கு சிம்புவின் படங்கள் வரவு குறைந்தது. மன அமைதிக்காக ஆன்மிகம் பக்கம் மனதை திருப்பினார் சிம்பு.                                   

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்திய போது, மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் சிம்பு.தோல்விகளும், பிரச்சனைகளும் சந்தித்த வந்த சிம்புவிற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளி வந்த மாநாடு திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.வெங்கட் பிரபு இயக்கத்தில் மாறுபட்ட திரைக்கதையில் வந்த மாநாடு சிம்புவுக்கு ஒரு கம் பேக் தந்தது. தனது வித்தியாசமான நடிப்பில் கதைக்கு உயிர் தந்திருந்தார் சிம்பு. மாநாடு படத்திற்கு பின்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகியவை சிம்பு நடிப்பில் வெளியாகின.

நடிப்பு, நடனம், திரைக்கதை, பாடல்கள் எழுதுவது என  பன்முக திறமை கொண்டவர் சிம்பு.தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சிம்புவின் சினிமா வாழ்வில் சில சறுக்கல்களை சந்தித்தார் என்பது இவர் சந்தித்த நெகடிவ்  விமர்சனங்களை போல் வேறு நடிகர் சந்தித்திருந்தால் சினிமாவை விட்டே போய் இருப்பார்.         

சாம்பலில் இருந்து மீண்டும் வரும் பீனிக்ஸ் பறவை போல் எதிர்மறை விமர்சனங்களில் இருந்து மீண்டு வந்துள்ளார் சிம்பு. மாநாடு படத்திற்கு பின்பு மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடிக்க ஆரம்பித்து விட்டார். சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் எண்ணிக்கையே இதற்கு சாட்சி.   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com