மிரட்டும் சூரியின் ’கொட்டுக்காளி’ போட்டோஸ்!!

’கொட்டுக்காளி’ படம்
’கொட்டுக்காளி’ படம்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இயக்குநர் வெற்றிமாறனின் ’விடுதலை’ படத்திற்கு பிறகு அடுத்தகட்டமாக நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே தயாரிப்பில் சூரி ஹீரோவாக நடிக்கும் ’கொட்டுக்காளி’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல், படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா‘ படத்தை தயாரித்திருந்தார். தொடர்ந்து அவர் தற்போது தயாரிக்கும் புதிய படமான கொட்டுக்காளி-ல் சூரி நாயகனாக நடிக்கிறார். அவருடன்அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி, சர்வதேச கவனம் பெற்ற ’கூழாங்கல்’ பட புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இப்படத்திற்கு ’கொட்டுக்காளி’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் சூரி முதல்முறையாக விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட்டானது. பொதுவாக நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்த நடிகர் சூரி, விடுதலை படத்தில் தன்னை ஒரு ஹீரோவாக நிலை நிறுத்திக்கொண்டுள்ளார்.

விடுதலை படத்தின் 2வது பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்  காத்துகொண்டிருக்கும் நிலையில், சூரி இரண்டாவது முறையாக ஹீரோவாக நடிக்கும் கொட்டுக்காளி படத்தின் புகைப்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதில் நடிகர் சூரி சேவலுடன் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தின் டீஸர், டிரெயிலர் என ஏதாவது ஒரு வீடியோவை வெளியிடுங்கள் என கமெண்ட தட்டி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com