மாஸாக தயாராகும் சிவகார்த்திகேயன்.. வெளியானது SK21 பட அப்டேட்..!

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு அயலான் திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது. இந்த படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் என்பதால் பொங்கலுக்கு நன்றாக கல்லா கட்டியது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படம் வெளியாகும்.

தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். ராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ராணுவ அதிகாரியாக நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான வேலைகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. வரும் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கு தயாரான வீடியோவையும் பகிர்ந்து Hearts on fire என குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com