சிங்கம் ஒன்றைத் தத்தெடுத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்!

சிங்கம் ஒன்றைத் தத்தெடுத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்!

மிழ் சினிமாவில், ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் 2012ம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றி வந்த இவர், அடுத்தடுத்து சினிமாவில் நடித்து வெற்றிப் படங்களைக் கொடுத்ததால், தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் பெரிதாக இடம் பிடித்தார். சமீபத்தில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி இருக்கும், ‘மாவீரன்’ திரைப்படத்தை நடித்து முடித்து இருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘ரங்கூன்’ திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக் ஷன்ஸ் நிறுவனம் சார்பில் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட சிவகார்த்திகேயன், சினிமா தவிர தனது ரசிகர் மன்றங்களின் மூலம் பல்வேறு நலத்திட்ட சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்.

அந்த வகையில், சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வசிக்கும், ‘ஷேரு’ என்று பெயரிடப்பட்டு வளர்ந்து வரும் மூன்று வயது ஆண் சிங்கம் ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்து இருக்கிறார். தற்போது வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் அந்த மூன்று வயது சிங்கத்துக்கு உண்டான ஆறு மாத உணவு மற்றும் மருத்துவச் செலவுகளை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com