
பூமிக்கு வரும் வேற்று கிரகவாசியோடு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்வது போன்ற கதைக்களத்துடன் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படம் முழு நீள லைஃவ் ஆக்சன் திரைப்படமாகவும், அதிகப்படியான கிராபிக்ஸ் காட்சி கொண்ட படமாக உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை இன்று, நேற்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியிருக்கிறார்.
அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இஷா கோபிகர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, கருணாகரன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், அயலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. குறிப்பிட்ட ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், 'அயலான்' படக்குழுவை சேர்ந்த, இயக்குனர் ஆர் ரவிக்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தொழில்நுட்ப கலைஞர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதே போல் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா மற்றும் மகன் குகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆடியோ லாஞ்சில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், பொங்கல் ரேஸில் உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்', தனுஷின் 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். என்னோட படம் ஓடணும்... உன்னோட படம் ஓடணும் என்பது இல்லாமல் எல்லா படங்களும் நன்றாக ஓடி தும்சம் செய்ய வேண்டும் என கூறினார்.
மேலும், என்னை சில பேர் சூப்பர் என சொல்வார்கள். சிலர் பேர் திட்டுவார்கள். நான் இதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. என்னுடைய ஹேட்டர்ஸ்களுக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. புடிச்சவங்களுக்காக நான் எப்போதும் போல என் பாதையில் ஓடிக்கொண்டிருக்க போகிறேன் என விமர்சிப்பவர்களுக்கு மாஸான பதிலடி கொடுத்துள்ளார்.