கங்குவா படத்தில் சூர்யாவின் வெவ்வேறு தோற்றம்.. மிரட்டும் போஸ்டர்!

Kanguva
Kanguva
Updated on

ங்குவா படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தன. தொடர்ந்து சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.

இதில், சில மாதங்களுக்கு முன்பு, சூர்யாவின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, 10 அடி உயரத்தில் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ரோப் கேமிரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்

மேலும், கங்குவா படத்தின் ஷூட்டிங்கை தான் நிறைவு செய்ததாக அறிவித்தார். இந்த நிலையில், படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ஏற்கனவே இப்படத்தில் இருந்து கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் First லுக் போஸ்டர் வெளிவந்த நிலையில், இன்று பொங்கல் ஸ்பெஷல் ஆக கங்குவா படத்தின் Second லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் இரண்டு கெட்டப்பில் மிரட்டலான லுக்கில் இருக்கிறார் நடிகர் சூர்யா. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com