மிரள வைக்கும் கங்குவா படத்தின் பாபி தியோல்.. புது கேரக்டரை அறிமுகம் செய்த படக்குழு!

Kanguva BobbyDeol
Kanguva BobbyDeol

சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தன. தொடர்ந்து சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.

இதில், சில மாதங்களுக்கு முன்பு, சூர்யாவின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, 10 அடி உயரத்தில் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ரோப் கேமிரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.

மேலும், கங்குவா படத்தின் ஷூட்டிங்கை தான் நிறைவு செய்ததாக அறிவித்தார். இந்த நிலையில், அவ்வபோது படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது ஒரு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், படத்தில் நடிக்கும் புதிய கேரக்டரை அறிமுகம் செய்துள்ளனர்.

அனிமல் படத்தில் வில்லனாக நடித்த கவனத்தை ஈர்த்த நடிகர் பாபி தியோல் கங்குவா படத்தில் உதிரன் என்ற முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இன்று பாபி தியோலின் பிறந்தநாள் என்பதால் கங்குவா பட குழு உதிரனின் தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக, போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருடைய ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்திருக்கின்றனர்.

இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதில் பாபி தியோல் மிரட்டும் லுக்கில் இருக்கிறார். பல பெண்கள் சூழ்ந்து நின்று உதிரனை தெய்வமாக தொட்டு வணங்குவது போல், அந்த போஸ்டர் உள்ளது. இதில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை 38 மொழிகளில், ஐமேக்ஸ் மற்றும் 3டி முறையில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com