நாளை சூர்யா பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு அட்டகாசமான ட்ரீட் கொடுக்க வரும் கங்குவா!

கங்குவா
கங்குவாIntel

ங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நள்ளிரவு வெளியாகிறது. நடிகர் சூர்யாவின் 42 ஆவது திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். கங்குவா என தலைப்பு வைக்கப்பட்டு உள்ள இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இது தான் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாகும்.

இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தத்திரைப்படத்திற்கு கங்குவா என டைட்டில் வைத்திருப்பதாக படக்குழு கடந்த ஏப்ரல் 16 ஆம் அறிவித்து இருந்தது. இந்தப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. படத்தின் ஷூட்டிங் கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜூ தீவுகள், கேரளா, கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடந்தது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ( ஜூலை 23) இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதனிடையே அதிகாலை 12.01 மணிக்கு படத்தின் க்ளிம்ஸ் வீடியோ ரிலீஸாகும் என்ற அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியீட்டு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களிடையே மிகப் பெரிய ஆர்வத்தை எட்டி உள்ளது.

கங்குவா திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ஓடிடி தளம் 80 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக படம் குறித்து பேசிய சிறுத்தை சிவா, “ உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3ஆம் நூற்றாண்டிற்கு பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் நெருப்பு என்று பொருள். கங்குவான் என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com