காத்திருக்கும் கங்குவா.. லீக்கான சூர்யா போட்டோ.. ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யா
சூர்யா

கங்குவா படப்பிடிப்பின் போது சூர்யா நடித்த காட்சிகளின் புகைப்படம் லீக்காகி வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தன. தொடர்ந்து சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.

இதில், சில மாதங்களுக்கு முன்பு, சூர்யாவின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, 10 அடி உயரத்தில் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ரோப் கேமிரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்

மேலும், கங்குவா படத்தின் ஷூட்டிங்கை தான் நிறைவு செய்ததாக அறிவித்தார். சமீபத்தில் தான் இந்த படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

ரசிகர்கள் படத்தின் ரிலீஸிற்காக காத்துக் கொண்டிருக்க படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சூர்யாவின் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது. அந்த புகைப்படத்தை ரசிகர்களும் வைரலாக்கி வருகிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் அஞ்சானில் நடித்த சூர்யா போன்று இருப்பதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com