ஆயிரம் பொற்காசுகள்
ஆயிரம் பொற்காசுகள்

விமர்சனம்: ஆயிரம் பொற்காசுகள்!

சிரிப்பு தோரணங்கள்!(3 / 5)

பெரிய நடிகர்கள்,பிரம்மாண்டம் ,தேவையற்ற சண்டைக்காட்சிகள் இல்லாமல் முதல் காட்சி முதல் முடியும் வரை நம்மை சிரிக்க வைக்கும் படமாக வந்துள்ளது ஆயிரம் பொற்காசுகள்.   

ரவி முத்தையா இயக்கி உள்ள இப்படத்தை KR இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.                    அரசு தரும் நிதி உதவி மூலம் கழிப்பறை கட்ட வீட்டின் பின் புறம் மண்  தோண்டும் போது சோழர் காலத்து ஆயிரம் பொற்காசுகள் கிடைகின்றன.இதை வீட்டின் உரிமையாளர்கள் அரசுக்கு தெரியாமல் சொந்தம் கொண்டாட நினைக்கும்போது, ஊரில் பலருக்கு தெரிய, ஒவ்வொருவரும் பொற்காசில் பங்கு கேட்கிறார்கள்.

இந்த பங்கு பிரச்சனையை சுற்றியே படம் நகர்கிறது.            இந்த படத்தின் கதையின் நகர்வு ஹீரோவை சுற்றி இல்லாமல் ஊரில் உள்ள மனிதர்களை சுற்றி நகர்கிறது. இதுவே இப்படத்தை பெரிதும் ரசிக்கும் படி செய்கிறது. பொற்காசுகளுக்காக ஆசைப்படும் ஒவ்வொரு நபரும் நடிப்பால் நம்மை ஈர்க்கிறார்.       

சுடுகாட்டில் குழி தோண்டுபவராக நடிக்கும் ஜார்ஜ் மரியான் நடிப்பில் இந்த முறையில்தான் தவிர்க்க முடியாத நடிகன் என்பதை உணர்த்தி விடுகிறார்.உடல் மொழியிலும், நகைசுவையிலும் வேறு எந்த நடிகருடன் ஒப்பிடமுடியாத படி நடித்துள்ளார். சித்தப்பு சரவணன், ஹலோ கந்தசாமி இருவரும் வரும்  அனைத்து காட்சிகளிலும்  சிரிக்க வைக்கிறார்கள். ஹீரோவை விட துணை கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்காகவே விதார்த்தை பாராட்டலாம் ஹீரோயின் அருந்ததி நாயருக்கு திரையில் காதலிப்பதை தவிர வேறு வேலை இல்லை.

படம் பொற்காசுகளை சுற்றி நடந்தாலும், அரசு தரும் பல்வேறு நலத்திட்ட மானியங்கள் எப்படி தவறான வழி யில் பயன்படுத்தப்படுகிறது என்று காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் டைரக்டர். ராம் மற்றும் சதீஷ்ஷின் படத் தொகுப்பில் உள்ள நேர்த்தி கதையை சரியாக கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஜான் சிவனேஷின் இசை பின்னணியில் மட்டும் முன்னணி வகிக்கிறது. எந்த வித எதிர்பார்ப்பும், லாஜிக்கும் இல்லமால் இப்படம் பார்க்க சென்றால்  ஆயிரம் பொற்காசுகள் நம்மை சிரிக்க வைப்பது உறுதி.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com