விஜய் சேதுபதியின் மகாராஜா ட்ரைலர் வெளியீடு... எப்படி இருக்கு தெரியுமா?

Maharaja trailer
Maharaja trailer

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள அவருடைய 50-வது படமான மகாராஜா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக உலா வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகன், வில்லன் என இரண்டு வேடங்களில் கலக்கி வருபவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா Maharaja.இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருக்கும் திரைப்படம் தான் மகாராஜா. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது இது தான் 50-வது படம் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது என்றே கூறலாம். படத்தில், நட்டி, முனிஷ்காந்த், அனுராக் காஷ்யப், பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி, பாரதிராஜா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான டிரைலர் வெளியாகி இருக்கிறது. ட்ரைலரில் வரும் காட்சிகள் மற்றும் வசனங்கள் எல்லாம் மிகவும் மிரட்டலாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஒருவழியாக திருமண தேதியை அறிவித்த பிரேம்ஜி... குவியும் வாழ்த்துக்கள்!
Maharaja trailer

குறிப்பாக அப்பாவி போல இருக்கும் விஜய் சேதுபதி கடைசி காட்சியில் கத்தியுடன் வருவது மற்றும் அனுராக் காஷ்யப் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு த்ரில்லிங் ஆக இருக்கிறது. அத்துடன் டிரைலரில் வரும் பின்னணி இசையும் துல்லியமாக இருப்பதால் ட்ரைலர் மக்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது என்றே சொல்லலாம்.

எனவே, வெளியாகி இருக்கும் மகாராஜா ட்ரைலரை பார்த்த பலரும் படத்திற்கு ஆவலுடன் காத்து இருப்பதாகவும், படம் கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட் படமாக விஜய் சேதுபதிக்கு அமைய போகிறது என்றும் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com