வெளியானது தங்கலான் படத்தின் டீஸர்!

Thangalaan
Thangalaan
Published on

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் டீஸர் இன்று வெளியாகி உள்ளது.

வரலாற்று பதிவாக உருவாகி உள்ள இந்த படத்தை k. E. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் டீஸர் வெளியிட்டு நிகழ்வில் பேசிய ரஞ்சித் " வரலாற்றுக்கும் தொன்மத்திற்கும் இடையே ஒரு சொல்லபடாத இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியை சொல்லும் முயற்சிதான் தங்கலான்.

நான் வியந்து பார்க்கும் நடிகர் விக்ரம். விக்ரம் சார் மிக உயரத்திற்க்கு சென்று விட்டார். இதன் பிறகும் இந்த படத்திற்க்கு காடு மலைகளில் கோவணம் கட்டி நடிக்கிறார் என்றால் சாரை பற்றி பேச வார்த்தைகளே இல்லை.இந்த படம் நடிக்கும் போது விக்ரம் சாருக்கு காயம் ஏற்பட்டது. இருந்தாலும் எந்த கவலையும் படாமல் நடித்து கொடுத்து விட்டார்.நீங்கள் இது வரை பார்க்காத பார்வாதியையும் மாளவிகாவையும் பார்க்கலாம். " என்றார். 

"படபிடிப்பு மலை பகுதியில் என்றவுடன் நான் ரம் மியமான ஒரு காட்டை கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால்   சூ ட்டிங் நடந்த (K. G. F) கோலார் தங்க வயல் பகுதி பாறையும், கல்லுமாக இருந்தது. ரஞ்சித் தேள் வேண்டும் என்றால் அடுத்த அரை மணி நேரத்தில் உதவியாளர் தேள் கொண்டு வருவார். பாம்பு வேண்டும் என்றால் கிடைக்கும். இங்கே விஷ ஜந்துக்கள் அதிகம். இங்கே வாழ்ந்த மனிதர்களின் வாழக்கையை உணர்வு பூர்வமாக சொல்லியிருகிறார் ரஞ்சித்.

கடும் குளிரில் கோவணம் கட்டி நடித்தது கஷ்டமாகவும், அதே சமயம் மாறுபட்ட அனுபவமாகவும் இருந்தது. 200 க்கும் மேற்பட்ட நாடக நடிகர்களை நடிக்க வைத்துள்ளார் ரஞ்சித். என் அப்பா வரலாற்றில் நல்ல விஷயங்கள் இருப்பதை போலவே மோசமான விஷயங்களும் இருக்கிறது என்பார். தங்கலான்  வரலாற்றில் சொல்லப்படாத மோசமான பக்கம்." என்றார் விக்ரம்.

தங்கலான் படத்திற்க்கு G. V. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி  26 ம் தேதி வெளியாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com