ப்ரீ புக்கிங்கிலேயே நடிகர் விக்ரமின் தங்கலான் படத்தின் கோடி கணக்கில் வசூல் செய்துள்ளது.
சினிமாவில் தொடரும் பாலா - விக்ரம் போட்டி தற்போது பாக்ஸ் ஆபிஸிலும் வந்துள்ளது. விக்ரமின் மகன் நடித்த ஆதித்ய வர்மா பட பிரச்சனையை தொடர்ந்து இருவருக்கும் கருத்த் வேறுபாடு இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தங்கலானும், வணங்கானும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.
சியான் விக்ரம் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்குப் பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் ' தங்கலான்' படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் 'சியான்' விக்ரம் நடிக்கும் படம் 'தங்கலான்'. இப்படத்தில் மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க, பார்வதி திருவோத்து, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோலார் தங்கவயல் பகுதியை மையமாக கொண்டு கதைகளம் இருப்பதால் இந்த தலைப்பை இப்படத்திற்கு வைத்துள்ளார் பா.ரஞ்சித். ஏற்கனவே இந்த படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர் என அடுத்தடுத்து ரிலீஸாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படத்தில், விக்ரம் வித்தியாச தோற்றத்தில் மிரட்டியிருக்கிறார்.
மேலும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் கால கட்டத்தில் தங்கம் எடுப்பதற்காக தொழிலாளர்கள் எப்படி அடிமை படுத்தப்பட்டனர் என்பதை விளக்கும் விதத்தில் அமைந்திருந்தது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர். படத்தின் அடுத்த பாடலான தங்கலான் வார் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சூப்பராக நடந்து முடிந்தது.
தன்னுடைய மயக்கும் இசையால், தங்கலான் படத்தில் தன்னுடைய மேஜிக்கை காட்டியுள்ளார் ஜிவி பிரகாஷ். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தங்கலான் படத்தின் ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது. ஆம், கடந்த வாரம் இப்படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில் இதுவரை ரூ. 4.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கண்டிப்பாக முதல் நாள் வசூல், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இதற்குமுன் வெளிவந்த விக்ரமின் கோப்ரா திரைப்படம் ரூ.17 கோடிக்கு தான் விற்பனை ஆனது. ஆனால், தற்போது தங்கலான் படத்தின் மீது மாபெரும் நம்பிக்கை இருப்பதன் காரணமாகவே இப்படத்தை ரூ.25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.