எத்தனை முறை பேசினாலும், எவ்வளவு முறை யோசித்தாலும், தலைமுறைகள் தாண்டி ஈர்க்கும் ஒரே விஷயம் காதல். காதல் காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்து வருகிறது. பார்த்து கொண்டே காதல் பார்க்காமல் காதல் என பல கடிதம் மூலம் காதல் என்ற பல காதல்களை தமிழ் சினிமாவில் வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மென்மையான காதல் படங்கள் வருவதில்லை. வன்முறை கதை களம் கொண்ட படங்கள் அதிகமாக வருகிறது என்ற வருத்தம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதை போக்கும் விதமாக தீராக் காதல் திரைப்படம் வெளியாக உள்ளது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ளது.
பாடலாசிரியர் மோகன்ராஜா யாரும் பயன்படுத்தாத வார்த்தையான 'உசுராங்கூட்டில்' என்று தொடங்கும் பாடலை தீராக் காதல் படத்திற்காக எழுதியுள்ளார். தீராக் காதல் படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்
"எல்லா கதைக்கு பின்னாடியும் சில கதைகள் இருக்கும். அதே போல் எனக்கும் இயக்குநர் ரோகினுக்கும், இரண்டு வருடக் கதை உண்டு. நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாகவே படம் பண்ண வேண்டியது, எங்களின் கதையைக் கேட்டு, லைக்கா நிறுவன தமிழ் குமரன் சார் இரவு 11 மணிக்கு போன் செய்து கதை நன்றாக இருப்பதாகச் சொன்னார். அது ஒரு பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது, ஆனால் படம் லேட்டாகவே.. படம் நடக்க வேண்டுமெனத் திருப்பதி மலை ஏறி நேர்த்திக்கடன் செலுத்தினோம், அங்கு இருந்த போது அதிசயம் நடந்தது. தமிழ் குமரன் இந்தப் படம் செய்யலாம் என்றார். இந்தப்படம் மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கும், ஜெய் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ஒரே முடிவாக இருந்தார், ஏன் என்று தெரியவில்லை. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஷிவதாவின் தீவிர ரசிகை நான். படத்தில் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. அனைவரும் அதனை ரசிப்பீர்கள்" என்றார்
ஜெய் "இந்தப் படத்தின் கதையை, கதையாகக் கேட்கும்போது நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு நன்றாக இருக்குமா? என்று ஒரு குழப்பம் இருந்தது, ஆனால் எனக்கு இயக்குநர் மீது நம்பிக்கை இருந்தது. அவரது அதே கண்கள் படத்தை 4 முறை பார்த்துள்ளேன். இந்த மாதிரி இயக்குநரிடம் பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடந்தது சந்தோஷம். ஒளிப்பதிவாளர் ரவி என்னை இந்தப் படத்தில் அழகாகக் காண்பித்துள்ளார். பாடல்களும், இசையும் அருமையாக வந்துள்ளது. சித்துவின் ரசிகன் நான். இந்தப் படம் அனைவருக்கும் தங்களுடைய சொந்த வாழ்வில் நடக்கும் நிகழ்வைப் போல் இருக்கும், இதற்காக மொத்த குழுவும் கடுமையாக உழைத்துள்ளனர். ரோகின் ஒரு மிகப்பெரும் புத்திசாலி அவருடைய பணி தனித்துவமாக இருக்கும், படத்தில் இரண்டு நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர், ஐஸ்வர்யாவின் பெரும் ரசிகன், தயாரிப்பாளர் லைக்கா தமிழ் குமரனுக்கு நன்றி, ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் நன்றி, படம் பார்த்து விட்டு நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று தான் ஐஸ்வர்யாவின் ரசிகன் என்பதை ஒப்புக்கொண்டார்.