ஆண் குழந்தைக்கு தாயான அமலாபால்: குவியும் வாழ்த்துக்கள்; பெயர் என்ன தெரியுமா?

அமலாபால்
அமலாபால்

நடிகை அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த நடிகை அமலாபால், தனது குடும்ப வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். தமிழ் சினிமாவில், ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்ற போதிலும் அடுத்து வந்த, ‘மைனா’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து, அனைவரது கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அதைத் தொடர்ந்து வெளிவந்த ‘தெய்வ திருமகள்’ படத்தில் இவர் சிறிய ரோலில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரையும் கவனிக்க வைத்தார். தொடர்ந்து வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களிலும் அமலாபால் நடித்திருந்தார். 2013ல் விஜய்க்கு ஜோடியாக, ‘தலைவா’ படத்தில் நடித்த அவர், 2014ல் மெகா ஹிட் அடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களிலும் அவர் நடித்து வந்தார். குறிப்பாக 2019ல் வெளியான ‘ஆடை’ படத்தில் கதைக்குத் தேவை என்பதால் ஆடையே அணியாமல் நடித்திருந்தார். சமீபத்தில் கூட அவரது நடிப்பில் வெளியான ‘ஆடு ஜீவிதம்’ மலையாள படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இவர் பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின் சினிமாவில் நடித்து வந்த அமலாபால், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்நிலையில், அக்டோபர் 26ம் தேதி அமலாபால் தனது 32வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது தனது நண்பர் ஜெகத் தேசாய் மீதான காதலை வெளிப்படுத்தி அவருக்கு மோதிரம் அணிவித்த வீடியோவை பதிவிட்டிருந்தார். தொடர்ந்து இருவரும் கொச்சியில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடிக்கு இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமலாபால், தனக்கு 11ம் தேதியே குழந்தை பிறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்து அமலாபால் வீட்டிற்கு வரும்போது குழந்தை மற்றும் அமலாபாலுக்கு அவருடைய கணவர் பிரம்மாண்டமாக வரவேற்பு அளித்திருக்கிறார். வீட்டில் பலூனால் அலங்கரித்து அமலாபாலுக்கு அவருடைய கணவர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை அமலாபால் பகிர்ந்திருந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு இலாய் (ILAI) என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்திருக்கிறார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த குழந்தையின் பெயருக்கான அர்த்தம் உலகம் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com