Anuya Bhagwat
Anuya Bhagwat

"நான் இன்னும் சிங்கிள்தான்" வதந்திகளுக்கு நடிகை அனுயா பளீச் பதில்!

Published on

டிகை அனுயா பல பிரபலங்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார் என எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மஹேக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை அனுயா பக்வத், தமிழில் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். இந்த படம் இவருக்கு மிகவும் வரவேற்பை பெற்று தந்தது.

இன்றளவும் ஜீவா, அனுயா, யுவன் சங்கர் ராஜா என பலருக்கும் இந்த படம் ஒரு திருப்புமுனையான முக்கிய படம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த படம் மிகவும் வெற்றியடைந்தது. தொடர்ந்து இவர் மதுரை சம்பவம் படத்திலும் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதையடுத்து நகரம் என பல படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து வெளியான படங்கள் தோல்வியடைந்ததால் இவர் சினிமாவில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது அனுயா பல பிரபலங்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார் என வதந்திகள் பரவி வந்தது. இதற்கு பதிலளித்து வீடியோ வெளியிட்ட அவர், "நான் துபாயில் பிறந்த வளர்ந்தவள். எனக்கு தமிழ் கொஞ்சமாகதான் தெரியும். என்னுடைய அப்பாவும் அம்மாவும் மருத்துவராக இருந்து வருகிறார்கள். என்னுடைய அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறார். நான் புனேவில் பொறியியல் பட்டம் பெற்றேன். பிறகு சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். நான் விஜய் ஆண்டனி, ஜீவா, சுந்தர்.சி, ஹரிகுமார் உள்ளிட்டோருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறேன் என எழும் வதந்திகள் அனைத்தும் உண்மையல்ல. நான் இன்னும் சிங்கிளாக தான் இருக்கிறேன். என்னிடம் கேட்க ஏதாவது கேள்விகள் இருந்தால் நீங்கள் என்னிடம் கேட்கலாம்" என பேசியுள்ளார்.

அதில் ஒருவர் "நீங்கள் என் தனியாக இருக்கிறீர்கள்? திருமணம் செய்து கொள்ளலாமே?" என கேள்விகளை கேட்டு இருந்தார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அனுயா "என்னை சுற்றி இருக்கும் ஆண்கள் யாரும் நல்லவர்கள் இல்லை" என பதிலளித்து இருந்தார்.

logo
Kalki Online
kalkionline.com