ஒரு சில நடிகைகள் சினிமா பின்புலத்தை கொண்டு நேரடியாக வெள்ளித்திரையில் நடிகைகளாக அறிமுகமாவார்கள். என்னதான் சினிமா குடும்பத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் நடிப்புத்திறன் மட்டும்தான் அவர்களை சினிமாவில் நிலைத்து நிற்க செய்யும். எத்தனையோ புதுமுக நடிகைகள் அறிமுகமாகி சரியான படங்கள் அமையாமல் படவாய்ப்புகள் குறைந்து தற்போது சமூக வலைதளங்ளில் தங்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் வெள்ளித்திரையில் உள்ளவர்களுக்கு எவ்வளவு வரவேற்பு மக்களிடம் உள்ளதோ, அதே அளவு வரவேற்பு தற்போது சின்னத்திரையில் நடிப்பவர்களுக்கும் உள்ளது. சின்னத்திரையில் தங்களின் நடிப்பு மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள், வெள்ளித்திரையில் நடிகர்களாகவும், நடிகைகளாகவும் வலம் வருகிறார்கள்.
அந்த வகையில் 'ரவுடி பேபி' என்று சொன்னால் நம் அனைவரின் நினைவிற்கும் வருபவர் தான் பிரபல தனியார் சேனலில் 'சத்யா' என்ற சீரியல் நடித்த ஆயிஷா. இவர் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் அவர் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி, பிறகு அந்த படத்தை விட்டு வெளி வந்த நிகழ்வைப் பற்றி கூறியிருக்கிறார்.
நடிகை ஆயிஷா ஜீனத்:
இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டு, காசர்கோடு என்ற மாநிலத்தில் பிறந்தார். அங்கு தான் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு கல்லூரியில் சேருவதற்காக சென்னை வந்தார். இவர் பிரபல தனியார் தமிழ் சேனலில் ஒளிபரப்பபட்டு வந்த 'பொன்மகள் வந்தாள்' என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன்பின்பு சன் தொலைக்காட்சியில் 'மாயா' என்ற சீரியலில் நடித்தார். அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான 'சத்யா' என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இதில் அவர் 'ரவுடி பேபி'யாக பிரபலமானார். இந்த தொடர் அப்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. ஜீ தமிழ் தொடரில் சிறந்த நடிகைக்கான விருது மற்றும் சிறந்த ஜோடிக்கான விருது ஆகியவற்றை இவர் பெற்றார்.
படத்தை மறுத்த ஆயிஷா ஜீனத்:
ஆயிஷா வெள்ளித்திரையில் பிரபல நகைச்சுவை நடிகரான சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு 2' என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார். இதற்காக ஆடிஷன் சென்று ஆயிஷா நடிப்பதாக இருந்தது. அதன்பிறகு அந்த படத்தில் இருந்து இவர் வெளியேறிவிட்டார். காரணம் படத்தில் நடிக்க வேண்டுமென்றால், சீரியல் தொடரில் இருந்து வெளியேற வேண்டும் என கூறியதால், 'பறக்கிறதை பிடிக்க போய் இருக்கிறதை விட வேண்டாம்' என்று அந்த படத்தை விட்டு விலகிவிட்டேன் என கூறினார். மேலும் அவர்களும் சீரியலில் நடிக்கும் ஆர்டிஸ்ட் வேண்டாம் என கூறிவிட்டார்கள் என தெரிவித்தார்.