'தி டோர்' திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை பாவனா!

 'தி டோர்' திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை பாவனா!
Published on

நடிகை பாவனாவை மறந்திருக்க மாட்டீர்கள். சமீப காலங்களில் தமிழில் அவரது நடிப்பில் படங்கள் எதுவும் வெளிவரவில்லை என்ற போதிலும், வெயில், ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்ளிட்ட திரைப்படங்கள் வாயிலாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்று விட்டார். பாவனா மட்டுமல்ல பாவனாவின் சகோதரர் ஜெயதேவும் திரைத்துறை சார்ந்தவரெ! இயக்குநரான ஜெயதேவ், அடுத்து இயக்கவிருக்கும் திரைப்படத்தில் பாவனா தான் நாயகி என்கிறார். முற்றிலும் திரில்லர் மற்றும் கொஞ்சம் ஹாரர் ஜானரில் எடுக்கப்படவிருக்கும் அந்தப் புதிய திரைப்படத்தில் பாவனா ஆர்க்கிடெக்ட்டாக நடிக்கவிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு வெளியான பட்டிணப்பாக்கம் திரைப்படமே ஜெயதேவ் இயக்கத்தில் இதுவரை வெளி வந்த கடைசித் திரைப்படம். அடுத்ததாக “தி டோர்” எனும் பெயரில் இந்த திரில்லர் கம் ஹாரர் திரைப்படத்தை இயக்கவிருப்பதாகத் தகவல். படம் தமிழில் எடுக்கப்பட்டு மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திக்கு டப் செய்யவிருக்கிறார்களாம்.

இத்திரைப்படத்தில் பாவனாவுடன், கணேஷ் வெங்கட்ராமன், ப்ரியா வெங்கட், கபில் வேலவன், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பிற நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவு வேலையை கெளதம் ஜி ஏற்கிறார். இசை, வருண் உன்னி.

சினிமா ரசிகர்களுக்கு திரில்லர் படத்தில் கொஞ்சம் ஹாரர் கலந்து கொடுத்தால் பிடிக்கும் என்று நம்புவதால் இந்தப்படத்துக்கான ஸிகிரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது அதில் ஹாரர் பகுதிகளைச் சேர்த்ததாக ஜெயதேவ் தெரிவித்தார்.

சிலர் கேட்கிறார்கள், பாவனா உங்கள் தங்கை தானே? ஏன் இதுவரையிலும் அவரை வைத்து நீங்கள் படம் செய்யவில்லை என்று. அவர்களுக்கு என்னுடைய பதில், இதுவரை நான் எடுத்த திரைப்படங்களில் பாவனாவுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் என எதுவுமே எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இந்தப் படம் முற்றிலும் பாவனாவுக்குப் பொருத்தமானது என்று நான் நினைத்ததால் அவரை நாயகியாக்கினேன். இதில் பெரிதாக சிந்திக்க காரணம் எதுவுமில்லை என்றும் அவர் கூறினார்.

இயக்குநர் ஜெயதேவ் கைவிடப்பட்ட பேய் பங்களாக்களில் தங்கி அங்கு கோஸ்ட் என்று சொல்லப்படக்கூடிய ஆவிகளின் நடமாட்டத்தை அவதானிப்பது தனக்குப் பிடித்த வேலை என்றும், பலமுறை அப்படிச் சென்று தங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அப்படித் தங்குகையில் ஆவிகள் நடமாட்டம் இருப்பது போல உணர்ந்தாலும் அதைப் பற்றிய அச்சமெல்லாம் தனக்கு எப்போதும் இல்லை என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com