மீண்டும் பேயாக ஹன்சிகா!

மீண்டும் பேயாக ஹன்சிகா!

திருமணத்திற்க்கு பின் மீண்டும் பிசியாக நடிக்க துவங்கி விட்டார் ஹன்சிகா.

திருமணத்திற்க்கு பின் ஹன்சிகா  ஆதியுடன்  நடித்த பாட்னர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம்  வெளியானது. தற்போது ஹன்சிகா  கார்டியன் என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை சபரி மற்றும் குரு சரவணன் இணைந்து இயக்குகிறார்கள். சாம். C. S இசையமைக்கிறார்.

சுந்தர் C இயக்கத்தில் ஹன்சிகா  நடித்து 2016 ல் வெளிவந்த படம் அரண்மனை -2 படத்தில் பேயாக நடித்திருப்பார் ஹன்சிகா. இந்த படமும் ஹன்சிகாவின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மீண்டும் பேயாக கார்டியன் படத்தில்  அவதாரம் எடுத்திருக்கிறார் ஹன்சிகா. போஸ்டரில் பயமுறுத்தும் தோற்றத்தில் இருக்கிறார். இப்படத்தின் டீ சரை இன்று மாலை விஜய் சேதுபதி வெளியிடுகிறார்.

திருமணத்திற்க்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர தயாரா கும் ஹன்சிகாவை வாழ்த்துவோம். பேய் மீண்டும் ஹன்சிகாவுக்கு கை கொடுக்கும் என நம்புவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com