ஹன்சிகாவா இது? காந்தாரி பட புது அப்டேட் வெளியீடு!

Hansika
Hansika

மீண்டும் புது அவதாரம் எடுத்த ஹன்சிகாவின் காந்தாரி பட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு பின் நடிகை ஹன்சிகா மோத்வானி பலத் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான கார்டியன் திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஹன்சிகா, காந்தாரி படத்தில் புதிய அவதாரம் எடுத்திருக்கும் வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தி, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்த ஹன்சிகா, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்தார். ரசிகர்களால் குட்டி குஷ்பு என அழைக்கப்பட்ட ஹன்சிகா, இப்படத்தின் வெற்றிக்கு பின் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அமுல் பேபி போல நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பின் பிரபலம் ஆனார்.

இதையும் படியுங்கள்:
முதல் நாளே வசூலில் பட்டைய கிளப்பிய சூரியின் கருடன்... எவ்வளவு தெரியுமா?
Hansika

தனுஷ்,ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து வந்த ஹன்சிகாவுக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டார். திருமணத்திற்கு பிறகு நடித்து வந்த ஹன்சிகா, பார்ட்னர், 105 மினிட்ஸ், மை நேம் இஸ் ஸ்ருதி, கார்டியன் போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து தற்போது ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள காந்தாரி என்கிற திரைப்படத்தின் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா. இந்த திரைப்படத்தில், மெட்ரோ ஷிரிஷ், மைல் சாமி, ஸ்டண்ட் சில்வா, வினோதினி, பவன் தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், குடிவேலு முருகன், கலைராணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஹன்சிகா மிகவும் வயதான தோற்றம் கலந்த வித்தியாசமான லுக்கில் இருக்கும் ஹன்சிகாவை பார்த்து ரசிகர்கள், இது ஹன்சிகாவா என கேட்டுள்ளனர். இத்திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com