ஆளே மாறி போன குஷ்பு.. ஷாக்கான ரசிகர்களை கூல் செய்த நடிகை!

ஆளே மாறி போன குஷ்பு.. ஷாக்கான ரசிகர்களை கூல் செய்த நடிகை!
Editor 1

புதிய ஷாட் ஹேர் ஸ்டைலில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் நடிகை குஷ்பு.

நடிகை குஷ்பு 80, 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.ரஜினி, கமல் என தமிழில் டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகை மட்டுமில்லாமல் அரசியல் பிரமுகராகவும் இருந்து வருகிறார்.குஷ்பு 2000 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

குஷ்பு இன்ஸ்டாகிராமில் சூப்பர் ஆக்டிவாக இருப்பார்.வெக்கேஷன் செல்லும் புகைப்படங்கள் , பியூட்டி டிப்ஸ் போன்றவற்றை பகிர்வார். நடிகை குஷ்பு சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஃபிட்டானது இணையத்தில் பேசும் பொருளாக மாறியது. சமீபத்தில் நடிகை குஷ்பு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்பு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்தார். ஆனால் படத்தின் நீளத்தை கருத்தில் கொண்டு குஷ்பு இடம்பெற்ற காட்சிகள் நீக்கப்பட்டதாம். குஷ்பு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர், அனைத்து விஷயங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று ஷாட் ஹேர் ஸ்டைலில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கேப்ஷனாக ‘மாற்றம் தவிர்க்க முடியாதது மற்றும் நிலையானது’ என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி முடி வெட்டி விட்டீர்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதை பார்த்து ஷாக்கான நடிகை குஷ்பு, தனது நீண்ட கூந்தலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நான் என் கூந்தலை வெட்டவில்லை, அதை நான் ஒருபோதும் செய்யமாட்டேன், முந்தைய ஷார்ட் ஹேர் பதிவு என்னுடைய அடுத்த படத்திற்க்கான ட்ரையல் லுக், தவறுதலான கோணத்தில் அந்த பதிவு இருந்திருந்தால் மன்னிக்கவும் என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com