தலைவர் 170வது படத்தில் இணைந்த கதாநாயகிகள்!

தலைவர் 170வது படத்தில் இணைந்த கதாநாயகிகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் தலைவர் 170 படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு தலைவர் 170 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாஸ் வெற்றியடைந்த நிலையில், அதன் வசூல் எக்கச்சக்கமாக எகிறியது. பான் இந்தியா நடிகர்கள் நடித்திருந்ததால் இந்த படம் இந்திய அளவில் நல்ல வசூலை பெற்றது.

இதனையடுத்து சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படம் மூலம் கவனம் ஈர்த்த த.செ.ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. இருளர் பழங்குடியினர் சமுதாயத்தில் நடத்தப்படும் விதம் குறித்து, அவர்கள் மீதான போலீஸ் அடக்குமுறைகள் குறித்தும் அப்பட்டமாக ஜெய் பீம் படத்தில் படமாக்கி இருந்தார் த.செ. ஞானவேல்.

இந்நிலையில்,இவரது இயக்கத்தில் ரஜினி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. எப்படியும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தான் ‘தலைவர் 170’ படத்தில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்திற்கான லுக் டெஸ்ட் எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்தது. இதனால் ‘தலைவர் 170’ படப்பிடிப்பு இந்த மாதமே துவங்கி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ரஜினிகாந்தின் அடுத்த படத்தை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தலைவர் 170 படம் குறித்த அப்டேட்களை அவ்வபோது படக்குழு வெளியிட்டு வருகிறது.

அதன்படி நேற்று இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக படத்தில் நடிக்கும் 2 கதாநாயகிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மலையாள சூப்பர் ஸ்டார் நடிகையான மஞ்சு வாரியர்,சார்பேட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் மற்றும் நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com