கணவர் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா!

நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நயன்தாரா- விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது இயக்கிவரும் எல்ஐசி படத்தில் இருந்து அவரது மனையும் நடிகையுமான நயன்தாரா விலகி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

லவ் டூடே படத்தின் மூலம் புகழடைந்த பிரதீப் ரங்கநாதன் வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் எல்ஐசி என்ற படத்தில் இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார்.

இந்நிலையில், படத்தின் பெயர் பிரபல பொது துறை நிறுவனமான எல்ஐசியை குறிப்பிடுவதாக கூறி எல்ஐசி என டைட்டில் வைப்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது.படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்பு நடந்த நிலையில் தற்போது டைட்டிலை மாற்றவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எல்ஐசி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதனால் விரைவில் விக்னேஷ் சிவன் டைட்டிலை மாற்ற இருப்பதாக தெரிகிறது.

விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐசி என்ற படத்தை தொடங்கி இருக்கிறார்.பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்பு நடந்த நிலையில் தற்போது டைட்டிலை மாற்றவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எல்ஐசி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதனால் விரைவில் விக்னேஷ் சிவன் டைட்டிலை மாற்ற இருப்பதாக தெரிகிறது.ந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார்.

மேலும் ஹீரோவின் அக்கா கேரக்டரில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் தற்போது அவர் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் சம்பளம் ரூ. 10 - 12 கோடி என்பதால் தான் அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், நயன்தாராவின் விலகலுக்கான முழுமையான காரணத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com