
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ராதா. 1980 காலகட்டத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ் என தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவருடைய மூத்த மகள் கார்த்திகா தமிழ் சினிமாவில் ஜீவாவுக்கு ஜோடியாக, கோ படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் மட்டுமே நடித்த அவர், சினிமா விட்டு விலகினார்.
இந்நிலையில், இவருக்கு ரோஹித் மேனன் என்பவருடன் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அதிகாரபூர்வமாக நடிகை கார்த்திகாவே அறிவித்தும் இருந்தார். தற்போது, திருவனந்தபுரத்தில் கடற்கரையோரம் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் கார்த்திகா, ரோஹித்தின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
இதில், ராதிகா சரத்குமார், மெகாஸ்டார் சிரஞ்சீவி, சுஹாசினி மணிரத்னம், ரேவதி, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், மேனகா சுரேஷ், கௌசல்யா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
80களில் நடித்த தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபல நடிகைகள் பலரும் பங்கேற்றனர். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் 80ஸ்களில் வலம் வந்த கதாநாயகிகள் ஒன்றாகிய தருணம் அனைவரையும் பழைய காலங்களுக்கு அழைத்து செல்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.