திரை உலக படைப்பாளர்கள் ஆரம்பத்தில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை தயாரிப்பாளர்களை அமைத்துக் கொள்வது. சினிமாவை வாழ்க்கையாக எண்ணி பலர் நல்ல கதைகளை எழுதி வைத்துக்கொண்டு தயாரிப்பாளரை தேடி வாழ்க்கையின் பெரும் பகுதியை செலவு செய்த எண்ணற்ற இயக்குனர்கள் இந்தியா எங்கும் உண்டு. இப்படி தயாரிப்பாளர் பற்றாக்குறையால் இந்திய சினிமா மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது பலரும் தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி வருவது புதுமுக இயக்குனர்கள் அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பல குறைந்த பட்ஜெட் படங்கள் உருவாகவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இப்படி உருவான பல படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இந்திய சினிமாவின் போக்கை தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மாற்றி இருக்கிறது.
இந்த நிலையில் புதிய தயாரிப்பாளர் பட்டியலில் இணைந்திருக்கிறார் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, தற்போது ஹிந்தி என்று பலமொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா. ட்ரலலா மூவிஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
இதுகுறித்து நடிகை சமந்தா தெரிவித்து இருப்பது, ட்ரலலா மூவிஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற உள்ளடக்கத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டது.
இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது சமூக கட்டமைப்பு, வலிமை, அதன் சிக்கல் ஆகியவற்றை கதையாக எழுதி வாய்ப்பு தேடி வரும் இயக்குனர்களை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்டது ஆகும். மேலும் எதார்த்தமான, உண்மையான, உலகளாவிய கதைகளை சொல்ல விரும்பும் படைப்பாளிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கமாகவும் இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.