திடீரென மயங்கி விழுந்த சமந்தா.. படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி!

சமந்தா
சமந்தா

முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கணவர் நாகசைத்தன்யாவை விவாகாரத்து செய்துவிட்டு சுதந்திரமாக கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வந்தார். புஷ்பா படத்தில் உள்ள ஊ சொல்றியா பாடலில் குத்தாட்டம் போட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

இப்படி படங்களில் முன்னேறி வந்த சமந்தா, அடுத்த லெவலுக்கு செல்லபோகும் நிலையில் திடீரென அவர் நோயின் பிடியில் சிக்கினார். ஆம் மயோசிடிஸ் என்ற நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் தன்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்றும் ஒரு பேட்டியில் கண்ணீர் விட்டு கதறினார். சமந்தாவிற்கு இப்படி ஒரு நிலையா என ரசிகர்களும் வேதனையடைந்து வருகின்றனர். இந்த நோயின் காரணமாக சமந்தா பல படங்களை தட்டி கழிப்பதாக கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் கமிட்டான படத்தில் கூட நடிக்கமாட்டார் என சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால் சமந்தா ரசிகர்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

இந்த நிலையில், கடுமையான சண்டை காட்சி ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார் சமந்தா. நடிகை சமந்தா தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் சிட்டால் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்குகிறார்கள். இவர்கள் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த தி பேமிலி மேன் 2 தொடரில் சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா
சமந்தா

இந்த சிட்டாடல் வெப் தொடரில் இடம்பெறும் கடுமையான சண்டை காட்சி ஒன்றில், தனது உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று தெரிந்தும் டூப் போடாமல் நடித்தால், ஷூட்டிங் முடிந்ததும் திடீரென மயங்கி விழுந்துவிட்டார் என கூறப்படுகிறது. இதனால் பதறிபோன படக்குழு அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com