'பம்பர்' படத்தில் நடித்துள்ள நடிகை ஷிவானி!

'பம்பர்' படத்தில் நடித்துள்ள நடிகை ஷிவானி!
Published on

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோயினாக வர வேண்டும் என்றால் கேரளா, மும்பை, பெங்களூர் போன்ற பிற மொழி பின்னணியில் இருந்துதான் வர வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன், பிரியா பவானி சங்கர் போன்றவர்கள் இதை கொஞ்சம் மாற்றி உள்ளார்கள். இருப்பினும் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்களில் பலர் தமிழ் அல்லாத பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தான்.நமது தமிழ் பெண்களில் சிலர் விடா முயற்சி, திறமை போன்றவைகளை தன்னகத் தே கொண்டு சினிமாவில் ஜொலிக்க போராடிகொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் சமீகாலத்தில் பலரால் கவனிக்கப்படுபவர் ஷிவானி நாராயணன். விருதுநகரை பூர்வீகமாக கொண்ட ஷிவானி தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்திற்க்காக போராடிகொண்டிருக்கிறார். இவர் சின்னத்திரையில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி -3, பகல் நிலவு உட்பட பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர். விக்ரம், நாய் சேகர் ரி டர்ன்ஸ்,DSP,வீட்ல விஷேசம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது திறமையை வெளிக்கொணரும் விதமாக முதன்மை ஹீரோயினாக பம்பர் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வேதா பிக்ச்சர் தியாகாராஜா தயாரிக்கிறார்.ஜீவி, எட்டு தோட்டாக்கள் படங்களில் நடித்த வெற்றி பம்பர் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.தூத்துக்குடியில் வாழும் ஒரு இளம் பெண்ணாக நடித்துள்ளார் ஷிவானி.

மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'பம்பர்'. ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய ஷிவானி "தயாரிப்பாளர் தியாகராஜா சார் படத்திற்குத் தேவையான அனைத்தும் கொடுத்துள்ளார், இயக்குநர் செல்வம் மிகுந்த உழைப்பை இந்த படத்திற்குக் கொடுத்துள்ளார், படம் பார்த்தால் உங்களுக்குக் கண்டிப்பாகப் புரியும். நடிகர் வெற்றி, மற்ற படங்களை விட இந்த படத்தில் கொஞ்சம் மாறுபட்டு நடித்துள்ளார். அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும். படக்குழு அனைவருக்கும் நன்றி, படம் நன்றாக உள்ளது, உங்களுக்கும் பிடிக்கும்" என்றார். நடிகர் வெற்றி

"முதன்முறையாக நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட முயற்சி செய்துள்ளேன், தொடர்ந்து திரில்லர் படம் மட்டும்தான் செய்கிறேன் என்று என் மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, இந்த படத்தில் அது மாறும் என்று நம்புகிறேன், இயக்குநர் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார், அவர் நினைத்தது போலப் படம் வந்துள்ளது.இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது, கண்டிப்பாக படத்திற்கு ஆதரவு தாருங்கள், மாறுபட்ட ஷிவானியை பார்க்கலாம்" என்கிறார். நாமும் வெயிட் செய்வோம் . இயக்குநர் K பாக்யராஜ்

'அறிமுக இயக்குநர் செல்வகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் வேலை பார்த்த இயக்குநர்கள் இங்கு வந்துள்ளதை பார்க்கப் பெருமிதமாக இருக்கிறது. டிரெய்லர் நன்றாக உள்ளது. புரியாத பாடல்கள் தான் நிறைய வந்துகொண்டிருக்கிறன, ஆனால் இந்தப்படத்தில் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளது. நடிகர் வெற்றி முதல் படத்தில் தன் சொந்த பணத்தில் நடித்தார், அதிலும் நல்ல கதையாகத் தேர்ந்தெடுத்து நடித்தார். ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். படத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பாடல் பாடுபவர்கள் முதல் உரிமை இருக்கிறது. ஆனால் எழுத்தாளர்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கிறது. இதற்குக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் போட்டுக்கொண்ட நானும் ஒரு காரணம். இது மாற வேண்டும். புதுத் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். படத்திற்கு ஆதரவு தாருங்கள்," என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com