கன்னத்தில் முத்தமிட்டால் பட நந்திதாவுக்கு வாய்ஸ் கொடுத்தது இந்த நடிகையா?

நந்திதா
நந்திதா

பிரபல நடிகைகள் பலரும் டப்பிங் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அப்படி பல நடிகைகளுக்கு இன்று வரை வேறு ஒருவர் தான் டப்பிங் கொடுத்து வருகிறார். குறிப்பாக நடிகை நயன்தாராவின் இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் அவருக்கு நடிகையும், டப்பிங் ஆர்டிஸ்டுமான தீபா தான் வாய்ஸ் கொடுத்துவருகிறார்.

2002ஆம் ஆண்டு இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால். இந்த படத்தில் நடிகர் மாதவன், சிம்ரன், பார்த்திபன் மகள் கீர்த்தனா, நந்திதா தாஸ் ஆகியோர் இந்த படத்தில் நடித்து அசத்தியிருப்பர்.

ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இப்படம் இன்றளவும் பலரது மனதோடு ஒட்டக்கூடியதாக எடுக்கப்பட்டிருக்கும். ஈழத்தாயிடம் பிரிந்த ஒரு பெண் குழந்தையை நடிகர் மாதவன் எடுத்து வளர்ப்பார். எழுத்தாளர் சுஜாதா ‘அமுதாவும் அவனும்’ என்ற தலைப்பில் எழுதிய சிறுகதையே கன்னத்தில் முத்தமிட்டாள் படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம், லாஸ் ஏஞ்சல்ஸ், ரிவர்ரன், நியூ ஹவன், வெஸ்ட்செஸ்டர் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில், இப்படம் விருதுகளை அள்ளி குவித்தது.

சுகன்யா
சுகன்யா

இந்த படத்தில் நந்திதா தாஸ் ஈழத் தமிழராக நடித்திருப்பார். இதில், நந்திதா தாஸுக்கு ஈழத்தமிழ் மொழி டப்பிங் பேசியது பிரபல நடிகை சுகன்யா தான். ஈழத்தமிழ் மொழி வித்தியாசமாக இருக்கும். அதனை அழகாக பேசி படத்தின் ஆழத்தை தனது குரலால் உணார்த்தியிருப்பார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com