ஜப்பான் அழகுசாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதரானார் தமன்னா!

Actress Tamanna
Actress Tamanna

தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது பாலிவுட் வரை பிரபலமாக உள்ள நடிகை தமன்னா தற்போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற அழகுசாதன பொருட்களை தயாரிக்கும் ஷிஷீடோ நிறுவனத்தின் இந்தியா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகை தமன்னா தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். 90s கிட்ஸ் 2k கிட்ஸ் என அன்றிலிருந்து இன்றுவரை எல்லா கிட்ஸ்களும் இவரின் படங்களை பார்த்து வளர்ந்தவர்கள்தான். அந்த வகையில் தமன்னா நடித்து கடைசியாக தமிழில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் ஒரு நடிகையாகவே நடித்திருந்தார். அந்த படத்தில் ”காவாலா ” என்ற பாட்டிற்கு தமன்னா நடனமாடியது உண்மையாகவே அவரது கம் பேக்காக அமைந்தது. இதையெடுத்து பாலிவுட்டில் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஷிஷீடோ என்ற ஜப்பான் நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட்களுக்கு முதல் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். இதனைப் பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் தமன்னா, “ எப்போதும் தரமான சாதனங்களை மக்களுக்கு கொண்டுசெல்வதில் ஷிஷீடோ நிறுவனம் பெரும் பங்களிக்கிறது. அதனுடன் நானும் இணைந்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது “ எனப் பதிவிட்டிருந்தார்.

உலக புகழ்பெற்ற ஷிஷீடோ நிறுவனம் 1872 ம் ஆண்டு டோக்யோ நகரில்தான் முதன்முதலில் நிறுவப்பட்டது. பிறகு இந்த நிறுவனம் ஜப்பானில் வெவ்வேறு இடங்களில் நிறுவப்பட்டு இன்று இந்தியா உள்பட 150 நாடுகளுக்கு தங்களது தயாரிப்பை விற்றுவருகிறது. பண்டைய கலாச்சார முறையில் தயாரிக்க தொடங்கி இப்போது வெஸ்டர்ன் ஸ்டைல் வரை தங்களது வளர்ச்சியை காலத்திற்கு ஏற்றார் போல் அப்டேட் செய்துகொண்டுவருகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் எனத் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில் சீரம்,கிரீம்,மேக் அப் பொருட்கள், வாசனைத் திரவியம் என அனைத்து வகையான சாதனப் பொருட்களும் இங்கு தயாரிக்கின்றனர்.

இந்திய சந்தையில் ஷிஷீடோ நிறுவனத்தின் அழகுசாதன பொருட்களின் ஆரம்ப விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது கவனிக்கத்தக்கது.

அதேபோல் சிறிது நாட்களுக்கு முன்புதான் வனேசா என்ற இந்திய அழகு சாதனப் பொருள்கள் நிறுவனம் தமன்னாவுடன் இணைந்து புது அழகுசாதன பொருட்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஃபேஸ் வாஷ், பாடி வாஷ், மற்றும் பாடி லோஷன் போன்ற பொருட்களும் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com