ஏஜென்ட் கண்ணாயிரம்: திரைவிமர்சனம்!

ஏஜென்ட் கண்ணாயிரம்
ஏஜென்ட் கண்ணாயிரம்
Published on

ரீ மேக் செய்யும் படங்களில்  சொல்லப்படிருக்கும் மைய்ய கருத்தை புரிந்து அதை நம் மக்களுக்கு தகுந்தாற் போல் சொன்னால்தான் வரவேற்பை பெரும்.     

இல்லை என்றால் மக்களை ஈர்க்காது  என்பதற்கு இப்போது வெளியாகி இருக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படம் சிறந்த உதாரணம்.                               

சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் வெளியான  சாய் ஸ்ரீனிவாஸ் ஆத்ரேயா என்ற படத்தின் ரீ மேக் தான் ஏஜென்ட் கண்ணாயிரம். மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார்.

நகரத்தில் சிறு டிடெக்டிவாக இருக்கும் கண்ணாயிரம் (சந்தானம் ) தனது தாயின் மரணத்திற்கக்காக கோவை மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு வருகிறார். அங்கே ஏற்படும் சொத்து பிரச்சனைகளை செட்டில் செய்ய சில நாட்கள் தங்குகிறார்.           

இவர் தங்கும் ஊரில் அவ்வப்போது அனாதை பிணங்கள் கிடைக்கின்றன. இந்த பிணங்கள் பெரும்பாலும் ரயில்வே ட்ராக் அருகிலேயே கிடைக்கின்றன. இந்த பிணங்கள் எங்கிருந்து வந்தன? என்பதை கண்டு பிடிக்க முயல்கிறார் கண்ணாயிரம். காவல் துறை இவரின் முயற்சியை உதாசீனபடுத்துகிறது.

இறந்த பிறகு ஒரு கும்பல் இறந்தவரின் வீட்டிற்கு வந்து காசிக்கு ஈமக் கிரிகைகள் செய்வதாக சொல்லி பிணங்களை எடுத்து செல்வதை கண்டுபிடிக்கிறார்.                                     

இந்த பிணங்களின் கைரேகையை வைத்து பல்வேறு குற்றங்களை செய்ய முடியும் கண்டறிகிறார். இதன் பின்னால் இருப்பதும், இருப்பவரும் யார் என்று விடை தேடுவதே படத்தின் கதை.             

ஏஜென்ட் கண்ணாயிரம்
ஏஜென்ட் கண்ணாயிரம்

கேட்கும் போதும், சொல்லும் போதும், சுவாரசியமாகவும், திகிலாகவும் இருக்கும் இந்த கதையை எந்த வித சஸ்பென்ஸ் ட்விஸ்ட்டும் இல்லாமல், பார்வையாளர்களுக்கு எந்த விதத்தில்  திகில் உணர்வையும் ஏற்படுத்தாமல் தந்திருக்கிறார் டைரக்டர்.   

நகைச்சுவை, அம்மா செண்டிமெண்ட்,சஸ்பென்ஸ் என மூன்று விஷயங்களையும் சொல்ல நினைத்து மூன்றையும் அழுத்தமாக சொல்லவில்லை. நதியில் நீர் இருந்தும் குடிக்க முடியாமல் போவது போல, சந்தானம், புகழ், கிங்ஸ்லி  இருந்தும் காமெடி இல்லை.

செண்டிமெண்ட் காட்சிகளில் சந்தானம் நன்றாக நடிக்கிறார். ரியா சுமன் வந்து போகிறார்.தேனி ஈஸ்வர், சரவணன் ஒளிப்பதிவு மற்றும் லைட்டிங் கவித்துமாக உள்ளது. யுவனின் இசை பொருந்தி போகிறது.                       

சந்தானம் சார் உங்களிடம் இருந்து மக்கள் நகைச்சுவையை எதிர் பார்க்கிறார்கள். ஹீரோவாக நடித்தாலும் காமெடி சப்ஜெக்ட் செலக்ட் பண்ணுங்க. இங்க காமெடிக்கு தான் சார் பஞ்சம்.               

ஏஜென்ட் கண்ணாயிரம் - எதிர்பார்த்தது வேறு கிடைத்தது வேறு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com