அர்ஜூன் மகளுக்கும் தம்பி ராமையா மகனுக்கும் டும் டும் டும்... வைரலாகும் போட்டோஸ்!

Aishwarya arjun - umapathy ramaiah Marriage
Aishwarya arjun - umapathy ramaiah Marriage

அர்ஜூன் மகள் மற்றும் தம்பி ராமையா மகன் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

80 களின் நாயகன் அர்ஜுன் சார்ஜா. கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் என்ற போதும் இன்று வரை தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இவருக்கென்று தனி இடம் உண்டு. அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள்.மூத்த மகள் ஐஸ்வர்யா, தன் தந்தையைப் பின்பற்றி தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அவரது நடிப்பில் ‘பட்டத்து யானை’, ‘சொல்லி விடவா’ என்று இரண்டு திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

அர்ஜுன் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்காக ‘சர்வைவர்’ என்றொரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். அதில் பங்கேற்ற போட்டியாளர்களில் உமாபதி ராமையாவும் ஒருவர். ஐஸ்வர்யாவுக்கும், உமாபதிக்கும் சர்வைவர் ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பு தளத்தில் வைத்து அறிமுகம் நிகழ்ந்திருக்கிறது. உமாபதி, தமிழில் சில திரைப்படங்களில் நாயகனாக நடித்த பின் தற்போது சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா நடிப்பில் ‘ராஜாக்கிளி’ என்றொரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தகவல். உமாபதி ராமையாவும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும் டேட்டிங்கில் இருப்பதாகவும் விரைவில் அர்ஜுன் வீட்டில் மங்கல மேளச்சத்தம் கேட்கவிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி வந்தது.

ஆஞ்சநேய பக்தரான அர்ஜுன் போரூர் கெருகம்பாக்கத்தில் 28 அடி உயர ஆஞ்சநேயர் சிலையைப் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கும்பாபிஷேகம் முடித்திருந்தர். இந்த கோயிலில் தான் நேற்று அர்ஜூன் மகளுக்கும், தம்பி ராமையா மகனுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. பல திரைப்பட பிரபலங்கள் இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதில் விஷால் விஜயகுமார் கே எஸ் ரவிக்குமார் போன்ற முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
கேப்டன் மில்லர் படத்துக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரம்... என்ன தெரியுமா?
Aishwarya arjun - umapathy ramaiah Marriage

இந்த திருமண புகைப்படங்களை நடிகை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com