அஜித்துடன் இணையும் மார்க் ஆண்டனி பட இயக்குனநர்!

அஜித்துடன் இணையும் மார்க் ஆண்டனி பட இயக்குனநர்!
க.இப்ராகிம்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டில் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோவாக நடிகர் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித் குமாரின் துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் மகிழ் திருமேனி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டிருக்கிறது‌.

இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார். மேலும் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது பெருமளவில் முடிந்துள்ளது. இதிலும் நடிகர் அஜித் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதால் சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் நடிகர் அஜித்யின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலமாக ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ்நாட்டில் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறினார். இந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்தில் தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்துடன் இணைந்து இருப்பது ஆதிக் ரவிச்சந்திரன் மீதானா எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்து இருக்கிறது.

மேலும் இப்புதிய படத்திற்கான அப்டேட் ஜனவரி மாதம் பொங்கல் நாளில் வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com