

நடிகர் அஜித் தற்போது கார் ரேஸிங்கில் பிசியாக கலந்துக் கொண்டு வருவதால், ஏகே 64 தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.இந்நிலையில் அஜித்தின் ‘மங்காத்தா’ மறுவெளியீடு ஆகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘மங்காத்தா’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்தது. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் ஏகேவுடன் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, அஸ்வின், மகத், வைபவ், பிரேம்ஜி, அஞ்சலி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருந்தனர்.மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்த இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரித்திருந்தார். 'இப்போது வரை அஜித் ரசிகர்கள் மத்தியில் ‘மங்காத்தா’ படமென்றால் பெரிய உற்சாகமே இருக்கும். அந்தளவுக்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம் ‘மங்காத்தா’.
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவது டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே விஜய்யின் கில்லி உள்ளிட்ட படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வரவேற்பினை பெற்றிருக்கிறது. சமீபத்தில் ரஜினியின் 'படையப்பா' ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், ‘மங்காத்தா’ படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜனவரி மாதம் 23 ஆம் தேதி மங்காத்தா படம் ரீரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அதேபோல அமர்க்களம் படமும் பிப்ரவரியில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.